”கூடுதல் ரேஷன் பெற நீங்கள் ஏன் 20 குழந்தைகளை பெற்றுக்கொள்ளவில்லை?” - உத்தராகண்ட் முதல்வர்

”கூடுதல் ரேஷன் பெற நீங்கள் ஏன் 20 குழந்தைகளை பெற்றுக்கொள்ளவில்லை?” - உத்தராகண்ட் முதல்வர்
”கூடுதல் ரேஷன் பெற நீங்கள் ஏன் 20 குழந்தைகளை பெற்றுக்கொள்ளவில்லை?” - உத்தராகண்ட் முதல்வர்

பொதுமுடக்கத்தின் போது கூடுதல் ரேஷன் பொருட்களை பெற, மக்கள் அதிக குழந்தைகளை உற்பத்தி செய்திருக்க வேண்டும். நேரம் இருந்தபோது, நீங்கள் இரண்டை மட்டுமே பெற்றுக்கொண்டீர்கள். நீங்கள் ஏன் 20 ஐ பெற்றுக்கொள்ளவில்லை? என்று உத்தரகண்ட் முதல்வர் திரத் சிங் ராவத் தெரிவித்தார்.

"கிழிந்த ஜீன்ஸ்" பற்றிய கருத்து வெளியான சில நாட்களிலேயே, உத்தரகண்ட் முதல்வர் திரத் சிங் ராவத் நேற்று மற்றொரு சர்ச்சையைத் கிளப்பியுள்ளார், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது கூடுதல் ரேஷன் பெற மக்கள் அதிக குழந்தைகளை உருவாக்கியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள உத்தரகண்ட் முதல்வர், “பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு உறுப்பினருக்கு 5 கிலோ ரேஷன் வழங்கப்படுகிறது. 10 குழந்தைகளைக் கொண்டவர்களுக்கு 50 கிலோவும், 20 குழந்தைகளுடன் ஒரு குவிண்டால் தானியமும் கிடைத்தது. இரண்டு குழந்தைகள் மட்டுமே உள்ளவர்களுக்கு 10 கிலோ தானியம் மட்டுமே கிடைத்தது. " என்று கூறினார்.

"இதற்கு யார் காரணம்?" என்று கேள்வியெழுப்பிய முதல்வர், "இப்போது நீங்கள் அவர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறீர்கள். ஆனால் நேரம் இருந்தபோது, நீங்கள் இரண்டை மட்டுமே பெற்றுக்கொண்டீர்கள். ஏன் 20 உற்பத்தி செய்யவில்லை?" என்று ராவத் கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில், அமெரிக்கா 200 ஆண்டுகளாக இந்தியாவை அடிமைப்படுத்தியது என்றும் ராவத் கூறியது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com