மேகாலயா சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவத்தை அழைக்காதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

மேகாலயா சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவத்தை அழைக்காதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

மேகாலயா சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவத்தை அழைக்காதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
Published on

மேகாலயாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்க ராணுவத்தை ஏன் பயன்படுத்தவில்லை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

மேகாலயாவில் ஜைன்டியா மாவட்டத்தின் சான் கிராமத்தில் அமைந்துள்ள சுரங்கத்துக்குள், அருகில் உள்ள லைத்தின் ஆற்றில் இருந்து கடந்த 13 ஆம் தேதி தண்ணீர் புகுந்தது. இதையடுத்து சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களில் 15 பேர் வெளிவர முடியாமல் அதற்குள் சிக்கினர்.

 தேசிய பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்தவர்கள் முகாமிட்டு அவர்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். கடந்த மாதம் 24 ஆம் தேதி மழை பெய்ததால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. சுரங்கத்துக்குள் தண்ணீர் வற்றாததாலும் நீரை வெளியேற்ற சக்தி வாய்ந்த பம்புகள் இல்லாததாலும் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில் அனுபவம் வாய்ந்த 21 பேரை கொண்ட ஒடிசா தீயணைப்பு வீரர்கள், நவீன இயந்திரங்களுடன் மேகாலயா சென்றனர். அவர்கள், நீரை வெளியேற்றும் அதிக சக்திவாய்ந்த இழுவைத் திறன் கொண்ட 20 பம்புகளையும் கொண்டு சென்றனர். 

தேசிய பேரிடர் மீட்பு படையினருடன், ஒடிசா தீயணைப்பு குழு, கடற்படையினரும் ஈடுபட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுரங்கத் தில் எவ்வளவுதான் வெளியேற்றினாலும் தண்ணீர் குறையாததால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் உறவினர்கள் கூறும்போது, ‘’அவர்கள் இன்னும் உயிரோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கை போய்விட்டது. அவர்களின் உடலையாவது கொடுத்தால், இறுதி சடங்கு செய்ய முடியும்’’ என்று தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகளை விரைவு படுத்த உத்தரவிட வேண்டும் என ஆதித்யா என்.பிரசாத் என்பவர் உச்சநீதி மன்றத்தில் நேற்று பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் எஸ்.கே. கவுல் ஆகியோரைக் கொண்ட அமர் வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ’’சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்கள் அனைவரும் உயிரோடு இருக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறோம். தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் ராணுவத்தை ஈடுபடுத்த ஏன் அரசு உத்தரவிடவில்லை. கடந்த 3 வாரங்களாக நடந்துவரும் மீட்பு பணிகள் திருப்திகரமாக இல்லை. அவர்களில் சிலர் உயிரோடு இருந்தாலும் சிலர் இல்லை என்றாலும் அனைவரையும் மீட்டு வெளியே கொண் டு வரவேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com