இந்தியா
புதுச்சேரி, கேரளா, அசாமில் வெல்லப்போவது யார்? - ரிபப்ளிக் டிவி கணிப்பு
புதுச்சேரி, கேரளா, அசாமில் வெல்லப்போவது யார்? - ரிபப்ளிக் டிவி கணிப்பு
ரிபப்ளிக் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பின்படி கேரளாவில் சிபிஎம், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி, அசாமில் பாஜக ஆட்சியமைக்கும் என்று தெரிவித்திருக்கிறது.
கேரளாவில் மொத்தமுள்ள 140 இடங்களில் சிபிஎம் தலைமையிலான இடதுசாரி கூட்டணி 72 -80 இடங்களிலும், புதுச்சேரியில் மொத்தமுள்ள் 30 இடங்களில் 16-20 இடங்களில் என்.ஆர்.காங்கிரஸூம், அசாமில் உள்ள 126 இடங்களில் பாஜக 74-84 இடங்களில் வெல்லும் என்று கணித்திருக்கிறது.
ரிபப்ளிக் சேனல், சி.என்.எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளின் விவரம்:
புதுச்சேரி:
மொத்த தொகுதிகள் : 30
- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி : 16-20
- காங்கிரஸ் கூட்டணி : 11-13
- பிற : 0
கேரளா:
மொத்த தொகுதிகள் : 140
- சிபிஎம் கூட்டணி : 72-80
- காங்கிரஸ் கூட்டணி : 58-64
- பாஜக : 1-5
- பிற: 0
அசாம் :
மொத்த தொகுதிகள் -126
> காங்கிரஸ்: 40-50
> பாஜக : 74 -84
> பிற – 1-3