2026 Kerala Election Prediction
2026 Kerala Election Predictionweb

கேரளா| ஆட்சி மாற்றத்தை நோக்கி மக்கள்.. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!

2026 கேரளா சட்டமன்ற தேர்தல் நடந்துமுடிந்துள்ள நிலையில், தேர்தலில் யாருக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்ற கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
Published on

கேரளா, தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவும் முடிந்துள்ளது. கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதே தேதியில், மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்தது.

kerala election 2026
kerala election 2026

இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. கேரளாவைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 140 தொகுதிகளில் ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு, 71 இடங்களை தேவை. இந்த நிலையில், கேரளாவில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என இங்கு தெரிந்துகொள்வோம்.

பி-மார்க்

ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF): 72 - 79

இடது ஜனநாயக முன்னணி (LDF): 62 - 69

மற்றவை: 3

ராகுல் காந்தி - பினராயி விஜயன்
ராகுல் காந்தி - பினராயி விஜயன்web

பீப்பிள்ஸ் பல்ஸ்

ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF): 75 - 85

இடது ஜனநாயக முன்னணி (LDF): 55 - 65

மற்றவை: 0-3

மேட்ரிஸ்

ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF): 70 - 75

இடது ஜனநாயக முன்னணி (LDF): 60 - 65

மற்றவை: 2-4

kerala cm pinarayi vijayan on ugc draft regulations 2025
பினராயி விஜயன்x page

ஆக்ஸிஸ் மை இந்தியா

ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF): 78 - 90

இடது ஜனநாயக முன்னணி (LDF): 49 - 62

மற்றவை: 0-3

ஜேவிசி டைம்ஸ் நவ்

ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF): 72 - 84

இடது ஜனநாயக முன்னணி (LDF): 52 - 61

மற்றவை: 3-7

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com