மக்களவை சபாநாயகர் பதவி யாருக்கு? வெளியான தகவல்!

மத்திய அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற யூகம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மக்களவை சபாநாயகர் பதவிக்கு பாஜக எம்பி புரந்தேஸ்வரியின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சபாநாயகர் பதவி
சபாநாயகர் பதவிபுதிய தலைமுறை

மத்தியில் கூட்டணி அரசு அமைந்துள்ள சூழலில் மக்களவை சபாநாயகர் பதவிமிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக உறுப்பினர்கள் கட்சித்தாவல் நேரங்களில் சபாநாயகரின் முடிவு முக்கியமானதாக இருக்கும்.

இந்நிலையில் ஆந்திராவின் ராஜமுந்திரியிலிருந்து வெற்றிபெற்ற புரந்தேஸ்வரியின் பெயர் சபாநாயகர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புரந்தேஸ்வரி
புரந்தேஸ்வரி

சபாநாயகர் பதவியை கருத்தில் கொண்டுதான் புரந்தேஸ்வரிக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் உள்ளன. முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமராவின் மகளான புரந்தேஸ்வரி தற்போது பாரதிய ஜனதா கட்சியின் ஆந்திர மாநில தலைவராக உள்ளார். இவர் ஏற்கனவே 2 முறை மக்களவை உறுப்பினராக இருந்த அனுபவம் பெற்றவர்.

சபாநாயகர் பதவி
சபாநாயகர் பதவி| போட்டிபோடும் கூட்டணிக் கட்சிகள்.. தேர்வாகிறாரா ஆந்திராவை அலறவிட்ட புரந்தேஸ்வரி?

மத்திய அமைச்சராகவும் இருந்தவர். பாரதிய ஜனதாவின் பிரதான கூட்டணி கட்சியான தெலுங்குதேசத்தின் தலைவர் சந்திரபாபுவின் மைத்துனிதான் இந்த புரந்தேஸ்வரி என்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசாவிலிருந்து 6 முறை வெற்றிபெற்ற பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப் உள்ளிட்ட வேறு சிலரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.

சபாநாயகர் பதவி
சபாநாயகர் பதவி| போட்டிபோடும் கூட்டணிக் கட்சிகள்.. தேர்வாகிறாரா ஆந்திராவை அலறவிட்ட புரந்தேஸ்வரி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com