உச்சநீதிமன்ற நீதிபதியாக 2-வது தமிழ் பெண்.. வி.மோகனாவின் நீதித்துறை பயணம்!!
தமிழகத்தின் கோயம்புத்தூரில் ஒரு எளிய பின்னணியில் பிறந்த வி. மோகனா, தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், வழக்கறிஞரிலிருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகும் இரண்டாவது பெண் என்ற வரலாற்றை பெற்றிருக்கிறார். 1983-ல் அறிமுகப்படுத்தப்பட்ட 5 ஆண்டு சட்டப் படிப்பின் முதல் பேட்ச் மாணவியான இவர், கோவை சட்டக் கல்லூரியில் தனது சட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து, 1980-களின் இறுதியில் கோவை மாவட்ட நீதிமன்றங்களில் தனது பணியைத் தொடங்கினார். பெண்கள் நீதிமன்றங்களுக்கு வருவது அரிதான அந்தக் காலத்தில், முதல் தலைமுறை வழக்கறிஞராக பல தடைகளைத் தாண்டித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் மோகனா.1992-ல் டெல்லிக்கு இடம்பெயர்ந்தார். அங்கு புகழ்பெற்ற வழக்கறிஞரும், பின்னாளில் நீதிபதியுமான இந்து மல்ஹோத்ராவிடம் பயிற்சி பெற்றார். அங்கு பல்வேறு சட்டப் பணிகளில் பங்கேற்றார்.
அவரது சட்டப்பயணத்தில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது, பெண் ராணுவ அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் (Permanent Commission) வழங்க வேண்டும் என்ற வழக்கில் வாதாடி அவர் முன்வைத்த வாதங்கள் தான். இது பலரது கவனத்தை பெற்றதுடன் இந்த வழக்கின் தீர்ப்பு, இந்திய ராணுவத்தில் பாலின சமத்துவத்துக்கான முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. அவரது சட்டத் திறமையை அங்கீகரித்து, 2015-ல் உச்சநீதிமன்றம் இவரை 'மூத்த வழக்கறிஞர்' ஆக அங்கீகரித்தது. வழக்கமாக உயர்நீதிமன்ற நீதிபதிகளே உச்சநீதிமன்றத்திற்கு உயர்த்தப்படுவார்கள். ஆனால், வழக்கறிஞர் பணியிலிருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாவது மிகவும் அரிதான ஒன்று. நீதிபதி இந்து மல்ஹோத்ராவிற்குப் பிறகு, இந்த வழியில் நீதிபதியாகும் இரண்டாவது பெண் மோகனா ஆவார். அதேசமயம், தமிழ்நாட்டில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாகும் இரண்டாவது பெண்ணும் இவர்தான். அரசியல் சாசனச் சட்டம், குற்றவியல் சட்டம் எனப் பல துறைகளில் இவரது ஆழ்ந்த அறிவும், கடின உழைப்பும் இவரை இந்த உயரத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.
ஒருமுறை நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஒருவர், "பெண்கள் நீதிமன்றத்தில் குரலை உயர்த்தக்கூடாது, வீட்டுக்குள் இருக்க வேண்டும்" என இவரை விமர்சித்தபோது, நிதானம் இழக்காமல், "வழக்கின் சட்ட நுணுக்கங்களைப் பேசுங்கள்" எனப் பதிலடி கொடுத்துத் தனது திறமையால் வெற்றி பெற்றவர். "நீங்கள் முழுமையாகத் தயாராக இருந்தால், நீதிமன்றத்தின் மரியாதையைத் தானாகவே பெறலாம்," என்பது இளம் பெண் வழக்கறிஞர்களுக்கு அவர் கூறும் அறிவுரை. உச்சநீதிமன்ற நீதிபதியுள்ள வி. மோகனாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் விஜய்,

