“எனது மகள் பயங்கரவாதி அல்ல; தேவை வேலைதான்” - நாடாளுமன்றத்திற்கு வெளியில் முழக்கமிட்ட நீலமின் தாய்!

”எனது மகள் பயங்கரவாதி அல்ல. அவளுக்கு வேலையில்லை. எனவே அவள் மனம் உடைந்திருக்கிறாள்“ என்று நாடாளுமன்ற கட்டிடத்தின் வெளியில் கோஷமிட்ட நீலம் ஆசாத்தின் தாய் தெரிவித்துள்ளார்.
நீலம் ஆசாத்
நீலம் ஆசாத்முகநூல்

"எனது மகள் பயங்கரவாதி அல்ல. அவளுக்கு வேலையில்லை. எனவே அவள் மனம் உடைந்திருக்கிறாள்“ என்று நாடாளுமன்ற கட்டிடத்தின் வெளியில் கோஷமிட்ட நீலம் ஆசாத்தின் தாய் கூறியுள்ளார்.

மக்களவையில் அன்று நடந்தது என்ன?

நாடாளுமன்றத்தில் நடைப்பெற்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது அவை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் போதே, மக்களவையில் பார்வையாளர்கள் கூடத்தில் இருந்து அத்துமீறி கீழே குதித்த இரண்டு இளைஞர்கள் சபாநாயகரை நோக்கி சென்றனர். அவர்கள் கொண்டு வந்திருந்த வண்ணப் புகைக் குப்பிகளையும் வீசினர். இதனால், சிறிது நேரம் மக்களவை புகை மண்டலமாக காட்சி அளித்தது. அவையில் இருந்த எம்பிக்கள் சிலர் அவர்களை பிடித்து நிறுத்தினர். நாட்டின் உயர்ந்தபட்ச பாதுகாப்பு கொண்ட இடங்களில் ஒன்றான மக்களவையில் இந்த சம்பவம் நடைபெற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாது அவர்களுக்கு ஆதரவாக 2 பேர் நாடாளுமன்ற வளாகத்தின் வெளிபுறமும் கோஷம் எழுப்பினர். இந்த நால்வரையும் டெல்லி காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. நால்வரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. பாதுகாப்பு குறைபாடு குறித்தும், நாட்டில் இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை உள்ளிட்ட விவகாரங்கள் எந்த அளவிற்கு அதிருப்தி உள்ளன என்பது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.

”எனது மகள் தீவிரவாதி அல்ல” - தாய் உருக்கம்

இந்நிலையில், வெளி புறத்தில் கோஷமிட்டவர்களுள் ஒருவரான நீலம் ஆசாத் என்ற பெண்ணின் தாயார், தன் மகள் நீலம் குறித்து தெரிவித்துள்ளார். அதில், “எனது மகள் தீவிரவாதி அல்ல, அவளுக்கு தேவை வேலை மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.

இவரை குறித்து அவரது தாய் கூறுகையில், “என் மகள் பயங்கரவாதி அல்ல. அவளுக்கு அதிகம் படித்தும் இன்றுவரை வேலை கிடைக்கவில்லை. வேலையில்லாததால் அவள் மனசோர்வு அடைந்திருக்கிறாள். 2015 ஆம் ஆண்டு முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்சனை ஒன்றின் காரணமாக திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தார். நான் அவரின் உடல்நலனை குறித்து கவலை கொள்கிறேன். ஏனென்றால் அதிக நேரம் நீலமாள் உட்கார கூட முடியாது. ’நான் அதிக படித்துவிட்டேன். ஆனால் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. இதற்கு நான் சாவதே மேல்’ என்று எண்ணிடத்தில் வருத்தத்துடன் கூறி வந்தார்.” என்று தெரிவித்துள்ளார்.

நீலமின் சகோதரரான நிவாஸ், ”இவர் டெல்லி சென்றது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. ஹிசார் செல்வதாகக் கூறிவிட்டுதான் சென்றார்” என்று தெரிவித்துள்ளார்.

நிறைய படிப்பு.. மிகுந்த போராட்ட குணம்.. யார் இந்த நீலம் ஆசாத்?

நீலம் ஆசாத், ஹரியானா ஜிந்த் மாவட்டம் காசோ குர்த் கிராமத்தினை சேர்ந்தவர். இவருக்கு வயது 37. மே மாதம் புது தில்லியில் மல்லியுத்த வீராங்கனைகளின் பாலியல் தொடர்பான போராட்டத்திலும், 2020-2021 இல் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திற்கு தீவிரமாக ஆதரவளித்த ஒரு போராட்ட குணம் கொண்ட பெண்மணி ஆவார். BA, MA, B.Ed, M.Ed, CTET, M.Phil மற்றும் NET ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் பகத் சிங் மற்றும் அரசியலமைப்பு புத்தகங்களை விநியோகித்தும். தான் வசித்த கிராமத்தில் ஒரு நூலகத்தினை நடத்தியும் வருகிறார்.

நீலம் ஆசாத்
மூன்றாவது முறை மோடி பிரதமராக பதவியேற்கப் போவது உறுதி - அமித் ஷா நம்பிக்கை

பேராசிரியர் பணிக்கு தேவையான நெட் தேர்வினையும் கிளியர் செய்துள்ள இவர் தற்போது வேலையில்லாமலும் வேலையில்லா திண்டாட்டத்திற்காக குரல் கொடுத்து வருகிறார். இவர் கடந்த ஆறு மாதங்களாக டெல்லியில் ஒரு விடுதி ஒன்றில் தங்கி போட்டி தேர்வுகளுக்காக தன்னை தயாரித்து கொண்டு வருகிறார் என்பது கூடுதல் செய்தி.

மேலும் அவர் வசித்து வரும் பகுதியை சேர்ந்த மக்கள் இவரது கைதிற்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com