\
புலிகள் தாக்கி ஒருவர் பலி: பெங்களூரில் சோகம்!

புலிகள் தாக்கி ஒருவர் பலி: பெங்களூரில் சோகம்!

புலிகள் தாக்கி ஒருவர் பலி: பெங்களூரில் சோகம்!
Published on

பெங்களூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றியவரை, வெள்ளைப் புலிகள் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் உள்ளது பானர்கட்டா உயிரியல் பூங்கா. இங்கு பணியாற்றி வந்தவர் அஞ்சி. வயது 41. இவர் வழக்கம் போல, விலங்குகளுக்கு உணவாக இறைச்சிகளை வைத்துவிட்டு வருவது வழக்கம். அதன்படி நேற்று புலிகள் இருக்கும் பகுதிக்குள் சென்று இறைச்சிகளை வைத்தார். அப்போது புலிகள் அங்கு இல்லை. ஆனால், இரண்டு வெள்ளைப் புலிகள் திடீரென்று பாய்ந்து வந்தது. இதைக் கவனித்த அஞ்சி, வேகமாகத் தப்பி ஓடினார். ஆனால் பாய்ந்து துரத்திய வெள்ளைப் புலியான சவுபாக்யா, அஞ்சியை அடித்துக்கொன்றது. உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு முன் இதே புலிகள், வன பராமரிப்பாளர் ஒருவரைத் தாக்கியது. ஆனால், அவர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். அதே போல சமீபத்தில் இங்குள்ள 5 பெங்கால் புலிகள் சேர்ந்து வெள்ளை புலி ஒன்றைக் கொன்றது பரபரப்பானது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com