பீகாரில் தனிப்பெரும் கட்சி எது? - தேஜஸ்வி, பா.ஜ.க இடையே கடும் போட்டி!

பீகாரில் தனிப்பெரும் கட்சி எது? - தேஜஸ்வி, பா.ஜ.க இடையே கடும் போட்டி!

பீகாரில் தனிப்பெரும் கட்சி எது? - தேஜஸ்வி, பா.ஜ.க இடையே கடும் போட்டி!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி, முன்னணி நிலவரத்தில், பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்களை நெருங்கும் தாண்டி நிதிஷ் - பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்தாலும், தனிப் பெரும் கட்சியாக அதிக இடங்கள் பெறுவதில் தேஜஸ்வியின் ராஷ்டிரிய ஜனதா தளம், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மாலை 5 மணி வரை 58% சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை இரவு வரை நீளும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோன எதிரொலியாக, வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

முன்னிலை நிலவரத்தைப் பொறுத்தவரையில், மாலை 6.55 மணியளவு நிலவரப்படி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 122 இடங்களில் முன்னிலை வகித்தது. தேஜஸ்வியின் ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் - இடதுசாரிகள் இணைந்த மகா கூட்டணி 113 இடங்களைக் கைப்பற்றியிருந்தது.

பிற்பகல் வரை நிதிஷ் - பாஜக கூட்டணி 130 இடங்கள் வரை முன்னிலை வகித்து, பிறகு சற்றே இறக்கம் காண ஆரம்பித்தது; தேஜஸ்வி - காங்கிரஸ் கூட்டணியின் எண்ணிக்கை சிறிதளவில் உயரத் தொடங்கியது.

மாலை 6.45 நிலவரப்படி, தனிப் பெரும் கட்சியின் நிலையை எடுத்துக்கொண்டால், தேஜஸ்வியின் ராஷ்டிரிய ஜனதா தளம் 75 இடங்களைக் கைப்பற்றும் சூழலில் இருந்தது. அதேநேரத்தில், பாஜக 75 இடங்களை வசப்படும் நிலையில் இருந்தது. இன்னும் 35%-க்கும் மேலான வாக்குகள் எண்ணப்பட வேண்டியிருப்பதால், பீகாரின் தனிப்பெரும் கட்சி யார் என்பதில் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

> பீகார் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய 'லைவ்' அப்டேட்ஸ் இங்கே > https://bit.ly/38tlakR

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com