இந்திய கோடீஸ்வரர்களின் குழந்தைகள் கல்வி கற்க விரும்பும் நாடுகள் எவை? - ஆய்வறிக்கை

இந்திய கோடீஸ்வரர்களின் குழந்தைகள் கல்வி கற்க விரும்பும் நாடுகள் எவை? - ஆய்வறிக்கை
இந்திய கோடீஸ்வரர்களின் குழந்தைகள் கல்வி கற்க  விரும்பும் நாடுகள் எவை? - ஆய்வறிக்கை

இந்தியாவின் 70% மில்லியனர்கள் தங்கள் குழந்தைகளை கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்ப விரும்புகின்றனர் என ஹுருன் இந்தியா வெல்த் 2021 ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது

ஹுருன் இந்தியா வெல்த் 2021 ஆய்வறிக்கையின்படி (Hurun India Wealth Report 2021) இந்தியாவின் 70% மில்லியனர்கள் தங்கள் குழந்தைகளை கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்ப விரும்புகின்றனர் எனவும், இதில், 29% பேர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக அமெரிக்காவை விரும்புகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது, குழந்தைகளின் கல்விக்காக 19% பேர் இங்கிலாந்தை விரும்புகிறார்கள் எனவும், 12% பேர் நியூசிலாந்தை விரும்புகின்றனர் எனவும் , 11% பேர் ஜெர்மனியை விரும்புகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வர குடும்பங்கள் மும்பையில் உள்ளன, அதாவது மும்பையில் 20,300 மில்லியனர் குடும்பங்கள் உள்ளன. அதைத் தொடர்ந்து டெல்லி மற்றும் கொல்கத்தாவில் அதிகளவிலான கோடீஸ்வர குடும்பங்கள் உள்ளன. குறைந்தபட்சம் 7 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள குடும்பங்கள் கோடீஸ்வர குடும்பங்கள் என இந்த அறிக்கை வரையறுக்கிறது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இத்தகைய குடும்பங்களின் எண்ணிக்கை 11% அதிகரித்து, இந்தியாவில் தற்போது 4,58,000 கோடீஸ்வர குடும்பங்கள் உள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com