‘விடுமுறைக்கு எங்கே செல்வீர்கள்?’ ரசிகரின் கேள்விக்கு தோனி சொன்ன பட்டியல்!

‘விடுமுறைக்கு எங்கே செல்வீர்கள்?’ ரசிகரின் கேள்விக்கு தோனி சொன்ன பட்டியல்!

‘விடுமுறைக்கு எங்கே செல்வீர்கள்?’ ரசிகரின் கேள்விக்கு தோனி சொன்ன பட்டியல்!
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நடப்பு ஐபிஎல் தொடருக்காக அமீரகத்தில் இருந்த போது ரசிகர்களுடன் கலந்துரையாடினார். 

‘Gulf Ka Call’ மீட் மூலம் தோனி ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்திருந்தார். 

அதில் ரசிகர் ஒருவர் ‘அனைத்தையும் அப்பால் வைத்து விட்டு விடுமுறைக்காக எங்கே செல்வீர்கள்?’ என கேட்டிருந்தார். 

“ஹும்… இந்தியாவில் உள்ள மலை பிரதேசங்களுக்கு போக வேண்டுமென விரும்புவேன். கடந்த ஆண்டு கூட முசோரிக்கு அருகே உள்ள ஒரு இடத்திற்கு போயிருந்தேன். முதல் முறையாக என் வாழ்நாளில் பனிப்பொழிவை அங்கு அனுபவத்திருந்தேன்.

அதனால் வாய்ப்பு கிடைத்தால் இந்தியாவில் உள்ள மலை பிரதேசங்களுக்கு சென்று, நேரத்தை செலவிட விரும்புகிறேன். இந்தியாவில் நிறைய இடங்கள் இருப்பதால் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என கருதுகிறேன். மலை பிரதேசங்களுக்கு செல்வதே எனது பர்ஸ்ட் சாய்ஸ்” என சிரித்தபடி தோனி தெரிவித்த்துள்ளார்.

அதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிய யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சுமார் 90 ஆயிரம் பேர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com