“இன்னும் எவ்வளவு சொத்துக்களை முடக்குவீர்கள்” - விஜய் மல்லையா கேள்வி

“இன்னும் எவ்வளவு சொத்துக்களை முடக்குவீர்கள்” - விஜய் மல்லையா கேள்வி
“இன்னும் எவ்வளவு சொத்துக்களை முடக்குவீர்கள்” - விஜய் மல்லையா கேள்வி

தன்னுடைய சொத்துக்களை எவ்வளவுதான் முடக்குவீர்கள் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்.

சுமார் ‌ 9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் ஏய்ப்பு வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் மல்லையா தற்போது இங்கி‌லாந்தில் தஞ்ச‌ம் அடைந்துள்ளார். அவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்தியாவில் பெரிய அளவில் நிதி மோசடிகள் புரிந்துவிட்டு‌ வெளிநாடு ‌த‌ப்பிச் செல்லும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வை‌க்கும் வகையில் பொருளாதார குற்றவாளிகள் தப்பிப்பு தடுப்பு சட்டத்தை மத்தி‌ய அரசு க‌டந்தாண்டு கொண்டு வந்தது. அந்தச் சட்டத்தின்‌ கீழ் குற்றவாளி என அறிவிக்க‌ப்பட்ட முதல் ‌தொழிலதிபர் என்ற பெயரை விஜய் மல்லையாவின் மீது நடவடிக்கைகள்‌ தீவிரமடைந்துள்ளது. 

இந்நிலையில், விஜய் மல்லையா தனது ட்விட்டர் பதிவில், “ஒவ்வொரு நாள் காலையில் எழுகின்ற போதும் கடன் மீட்பு தீர்ப்பாய அதிகாரிகளால் என்னுடைய சொத்துக்களை முடக்கிக் கொண்டிருப்பதை பார்க்கிறேன். வட்டியுடன் சேர்த்து என்னுடைய மொத்த கடனே ரூ9 ஆயிரம் கோடிதான் என்று வங்கிகள் கூறுகின்றது. ஆனால், முடக்கப்பட்டுள்ள என்னுடைய சொத்துக்களின் மதிப்பு ரூ13 ஆயிரம் கோடியை எட்டிவிட்டது. எவ்வளவு தூரம்தான் இது போகும்? இது நீதியா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்த விவகாரத்தில் விஜய் மல்லையா தொடர்ச்சியாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளார். “கடந்த‌ 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரசின் கஜானாவை தமது கிங் ஃபிஷர் நிறுவனத்தின் லாபத் தொகை மூலம் நிரப்பியதாகவும், அந்த நிறுவனம் தற்போது நஷ்டத்தில் இருந்தாலும், முழுக்கடனை திருப்பிச் செலுத்த தாம் தயாராக இருப்பதாக” ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அத்தனை கடன்களையும் திரும்ப செலுத்த தயாராக இருப்பதாகவும் தன்னை திருடன் என்று கூற வேண்டாம் என்றும் அவர் கூறி வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com