'பரூக் அப்துல்லா எங்கே?' - தயாநிதி மாறனின் ஆவேச கேள்விக்கு அமித்ஷா பதில்

'பரூக் அப்துல்லா எங்கே?' - தயாநிதி மாறனின் ஆவேச கேள்விக்கு அமித்ஷா பதில்
'பரூக் அப்துல்லா எங்கே?' - தயாநிதி மாறனின் ஆவேச கேள்விக்கு அமித்ஷா பதில்

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா குறித்து திமுக எம்பி தயாநிதி மாறன் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

ஜம்மு- காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை மக்களவையில் அமித்ஷா தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் காட்டமாக பேசினர். திமுக எம்பி தயாநிதி மாறன் பேசிய போது பரூக் அப்துல்லா குறித்து கேட்டு ஆவேசமாக பேசினார்.

அப்போது, “மக்களவை உறுப்பினரான பரூக் அப்துல்லா எங்கே? பரூக் அப்துல்லாவை காணவில்லை; அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பரூக் அப்துல்லா பற்றிய தகவல் எதுவும் அவைக்கு தெரிவிக்கப்படவில்லை. மக்களவை உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டியது சபாநாயகரின் கடமை. பரூக் அப்துல்லாவின் நிலை என்ன என்று தெரியவில்லை. அவரது நிலை குறித்து இந்த அவைக்கு தெரிவிக்க வேண்டும்” என்றார் தயாநிதி மாறன்.

அதேபோல், தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியால் சுல் பேசிய போது, “நான் நாடாளுமன்றத்தின் 462வது இருக்கையில் அமர்ந்துள்ளேன். பரூக் அப்துல்லா 461வது இருக்கையில் அமர்வார். அவர் ஜம்மு-காஷ்மீரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால், அவரது குரலை இன்று கேட்க முடியவில்லை. என்னைக் கேட்டால், இந்த விவாதம் முழுமை பெறவில்லை” என்றார்.

இந்தக் கேள்விகளுக்கு பதில் அளித்த அமித்ஷா, “பரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை. வீட்டுக் காவலிலும் வைக்கப்படவில்லை. அவரது வீட்டில் தான் இருக்கிறார். அவரது விருப்பப்படியே இருக்கிறார்” என்று விளக்கம் அளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com