\
“நேரம் வரும்போது பலத்தை காட்டுவோம்” : பிரதமர் மோடி

“நேரம் வரும்போது பலத்தை காட்டுவோம்” : பிரதமர் மோடி

“நேரம் வரும்போது பலத்தை காட்டுவோம்” : பிரதமர் மோடி
Published on

எங்கள் உரிமையை விட்டுக் கொடுக்கமாட்டோம், நேரம் வரும்போது பலத்தை காட்டுவோம் என பிரதமர் மோடி சீனாவை எச்சரித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மற்றும் பொருளாதார மீட்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி, நேற்று 21 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து இன்று தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். முதலமைச்சர்களுடனான ஆலோசனைக்கு முன்னர் லடாக் எல்லையில் வீரமரணடைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன் இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றும், ஆனால் இந்தியாவுக்கு எதிராக எந்த நாடாவது அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கும் பலம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். தங்கள் உரிமைகளில் சமரசம் செய்துகொள்ள முடியாது என்றும், நேரம் வரும்போது தங்கள் சக்தி மற்றும் வலிமையை காட்டுவோம் என தெரிவித்துள்ளார். எல்லையில் உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீண்போகாது என நாட்டு மக்களுக்கு பிரதமர் உறுதி தெரிவித்துள்ளார். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com