\
புலிகளிடம் சிக்கிய இருவர்: வைரல் வீடியோ

புலிகளிடம் சிக்கிய இருவர்: வைரல் வீடியோ

புலிகளிடம் சிக்கிய இருவர்: வைரல் வீடியோ
Published on

புலிகளிடம்  இருவர் சிக்கி தவித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மஹாராட்டிரா மாநிலம் நாக்பூர் தேசிய பூங்காவில் உள்ள பாதையில் இருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஒரு புலி ஒன்று அவர்களை எதிர்கொள்கிறது. அதை கண்டு அஞ்சிப்போன இருவரும் இரு சக்கர வாகனத்திலேயே அசையாமல் உட்கார்ந்துள்ளனர். அதனை எதிரே காரில் வந்த ஒருவர் வீடியோ எடுக்கிறார். மேலும் அசையாமல் இருக்குமாறு அவர்களை அறிவுறுத்துகிறார். இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்திருப்பவர்களை உற்று பார்த்த புலி  அருகில் வந்து கவனித்து விட்டு திரும்புகிறது. அப்போது இரு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் இருந்து ஒரு புலி அவர்களை நெருங்குகிறது. பதறிப்போன அவர்கள் வண்டியை லேசாக நகர்ந்துகிறார்கள். அதை கண்டு முன் பக்கம் இருந்த புலி அவர்களை நெருங்குகிறது. இந்த உயிர்பயத்தின் நடுவே அந்த இருவரும் சிக்கி தவிக்கிறார்கள். இறுதியில் முன்பு காரில் இருந்தவர் அந்த புலியை விரட்டும் தொனியில் வாகனத்தை முன் நகர்த்துகிறார். இறுதியில் புலிகள் விலகி செல்கின்றன. ஒரு சினிமா காட்சியை போல உள்ள இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com