கர்நாடகாவில் நாளை அல்லது நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
பலத்த சர்ச்சைகளுக்கிடையே கர்நாடகா மாநில முதலமைச்சர் எடியூரப்பா இன்று பதவியேற்றுக் கொண்டார். அப்போது, கடவுளின் பெயராலும் விவசாயிகள் பெயராலும் பதவியேற்பதாக எடியூரப்பா தெரிவித்தார். அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. பதவியேற்பிற்கு பின், கர்நாடகாவில் ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழான விவசாய கடன்களை தள்ளுபடி செய்து முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டார்.
எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ள நிலையில் கர்நாடகாவில் நாளை அல்லது நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. பதவியேற்ற பின் பின் பேசிய எடியூரப்பா, பெரும்பான்மையை நிரூபிப்பது 101 சதவீதம் உறுதி என்றார். 5 ஆண்டுகளை அரசு பூர்த்தி செய்யும் என்றும் குறிப்பிட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக நாளை அல்லது நாளை மறுநாள் வரை காத்திருக்குமாறும் எடியூரப்பா தெரிவித்தார். இதனால் நாளை அல்லது நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.