\
கேரளாவில் ஜூன் 1-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!

கேரளாவில் ஜூன் 1-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!

கேரளாவில் ஜூன் 1-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!
Published on

தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வருகின்ற 31-ம் தேதி தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் கேரளா மற்றும் தென் இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை வரும் ஒன்றாம் தேதி தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே மத்திய மேற்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஏமனை நோக்கி நகரும் என்பதால் மத்திய கிழக்கு மற்றும் வடமேற்கு தென்கிழக்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கு முந்தைய அறிவிப்பில் கேரளாவில் 5-ஆம் தேதிதான் பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com