ஒரேநேரத்தில் குவிந்த புத்தாண்டு வாழ்த்துகள்: அரை மணி நேரம் முடங்கிய வாட்ஸ்அப்
புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாற வாட்ஸ்அப் சிறந்த ஒரு ஊடகமாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் புத்தாண்டு இரவில் பல கோடி பேர் ஒரே நேரத்தில் வாட்ஸ்அப்பில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டதால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு அது சற்று நேரம் செயலிழந்தது.
புத்தாண்டு நள்ளிரவில் பிறந்ததையொட்டி நாடு முழுவதும் ஏராளமான பொதுமக்கள் கேக் வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். நட்சத்திர விடுதிகளிலும் ஆட்டம் பாட்டத்துடன் பலருக்கு புதுவருடம் பிறந்தது. இதனிடையே தூரத்து நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்க, வாட்சப் மக்களை இணைக்கும் சிறந்த ஊடகமாக உருவெடுத்துள்ளது.
புத்தாண்டு இரவில் பலகோடி பேர் ஒரே நேரத்தில் வாட்ஸ்அப்பில் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இதனால் வாட்ஸ்அப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு அது சிறிது நேரம் செயலிழந்தது. இதனால் வாட்ஸ்அப் பயனாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சுமார் அரை மணி நேரம் வாட்ஸ்அப் முடங்கிய நிலையில் பிறகு அது சீர்செய்யப்பட்டது. அதன்பின் மக்கள் புத்தாண்டு நல்வாழ்த்துகளை பரிமாறத் தொடங்கினர்.