காவிரி வரைவுத் திட்டத்தில் உள்ளது என்ன?

காவிரி வரைவுத் திட்டத்தில் உள்ளது என்ன?

காவிரி வரைவுத் திட்டத்தில் உள்ளது என்ன?
Published on

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காவிரி வழக்கில் இன்று மத்திய அரசு தரப்பில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் இன்று நேரில் ஆஜராகி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்தார். காவிரி மேலாண்மை திட்ட அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும் மற்றும் உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ஆம் தேதி அளித்த தீர்ப்பையும் அமல்படுத்தும் அதிகாரமிக்க அமைப்பாக இது இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை திட்டம் என இதனை அழைக்கலாம் என்றும் மத்திய அரசின் வரைவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று காவிரி ஒழுங்காற்றுக் குழு தனியாக அமைக்கப்படும் என்றும் அதில் தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காவிரி வரைவுத் திட்டத்தில் உள்ளது என்ன? 

#காவிரி நீர்ப்பங்கீட்டு அமைப்பானது 9 பேர் கொண்டதாக இருக்கும்

#நடுவர் மன்றம் மற்றும் பிப்.16இல் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை காவிரி அமைப்பு அமல்படுத்தும்

#காவிரி நீர்ப்பங்கீடு முழுவதும் காவிரி அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும்

#நீர் சேமிப்பு, நீர்ப் பங்கீடு, நீர்ப் பங்கீட்டை முறைப்படுத்துவது ஆகியவற்றை அமைப்பு மேற்கொள்ளும்

#தீர்ப்பை அமல்படுத்த காவிரி அமைப்புக்கு முழு அதிகாரம் வழங்கப்படும்

#அணைகளின் இயக்கத்தை மேற்பார்வையிடும் அதிகாரம் காவிரி அமைப்புக்கு மட்டுமே இருக்கும்

#காவிரி ஒழுங்காற்றுக் குழு தனியாக அமைக்கப்படும் அதில் 9 பேர் உறுப்பினர்களாக இருப்பர்

#தண்ணீர் திறப்பது ஒழுங்காற்று குழு உதவியுடன் செயல்படுத்தப்படும்

#காவிரி அமைப்பு நடத்தும் கூட்டங்களில் குறைந்தது 6 உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும்

#செயல்பாட்டிற்கான விதிகளை 10 பேர் கொண்ட காவிரி அமைப்பே உருவாக்கலாம்

#தேவையான ஊழியர்களை நியமித்துக்கொள்ள காவிரி அமைப்புக்கு அதிகாரம்

#காவிரி அமைப்பால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் அதற்கு மட்டுமே கட்டுப்பாடுவார்கள். 

#அணைகள் திறப்பை மாநில அரசுகளே மேற்கொள்ளும்; காவிரி அமைப்பு வழிகாட்டுதலோடு அணைத் திறப்பை மாநிங்கள் மேற்கொள்ளலாம்

#மத்திய அரசு சமர்பித்துள்ள இந்தச் செயல்திட்டத்துக்கு காவிரி நீர் மேலாண்மை செயல்திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது

#அமைப்பின் தலைமையகம் பெங்களூருவில் அமையும் என அறிவிப்பு 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com