மருத்துவமனையில் நடப்பது என்ன ? வீடியோவில் சிக்கிய ஆதாரம்

மருத்துவமனையில் நடப்பது என்ன ? வீடியோவில் சிக்கிய ஆதாரம்

மருத்துவமனையில் நடப்பது என்ன ? வீடியோவில் சிக்கிய ஆதாரம்
Published on

தெலங்கானா மாநிலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துப்புரவு பெண் தொழிலாளியும் காவலாளியின் மனைவியும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 


தெலுங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டம் பெத கொடுரு மண்டலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மண்டலத்தை சுற்றி மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வரும் நிலையில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவர்கள் காலதாமதமாக வருவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு கீழ் பணிபுரியக்கூடிய செவிலியர்களும் உரிய நேரத்திற்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் பல காலங்களாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அங்கு பணி புரிய கூடிய துப்புரவு பெண் தொழிலாளியான கவிதாவும் , காவலாளியின் மனைவி ஷோபாவும் இணைந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நோயாளிகளுக்கு ஊசி செலுத்துவது, குளுக்கோஸ் செலுத்துவது என செவிலியர்கள் செய்யக்கூடிய அனைத்து பணிகளையும் இந்த துப்புரவு பெண் தொழிலாளியும், காவலாளியின் மனைவியும் இணைந்து செய்து வருகின்றனர். எந்த நோய்க்கு என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்றுகூட மருத்துவர்கள் எழுதித் தராத நிலையில் இவர்களாக ஏதோ ஒரு சிகிச்சை அளித்து வரும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது. 

இதனைத் தொடர்ந்து கவனித்து வந்த அங்கு சிகிச்சை பெற்று வரக்கூடிய நோயாளி ஒருவரின் உறவினர் மருத்துவமனையில் நடைபெற்று வரும் அவல நிலைகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தெலுங்கானா மாநில அரசு உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com