\
what reason of is seen covered uttarpradesh mosque
UP mosquetwitter

உ.பி. | தார்பாய்களால் மூடப்பட்ட தர்கா, மசூதிகள்.. பின்னணியில் இருக்கும் காரணம்!

உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் ஹோலியன்று நடக்கும் ஊர்வலத்தை முன்னிட்டு மசூதிகள் தார்பாய்கள் கொண்டு மூடப்பட்டுள்ளது.
Published on

’ஜூடா மார் ஹோலி' என்பது ஷாஜஹான்பூரில் ஹோலி நாளில் பல நூற்றாண்டுகளாகக் கொண்டாடப்படும் பழமையான பாரம்பரிய விழா. அப்போது பிரிட்டிஷ்கால அதிகாரிபோல உடையணிந்த ஒருவர், எருமை மாட்டு வண்டியில் ஊர்வலம் வரும்போது, பொதுமக்கள் வண்ணநிறப் பொடிகளுடன் விளையாடிக்கொண்டே அவர்மீது காலணிகளை வீசுவார்கள். இந்த ஊர்வலம் செல்லும் வழிகளில் இருக்கும் 48 தர்காக்கள், மசூதிகளை தார்பாய் கொண்டு மறைத்திருக்கிறது மாநில நிர்வாகம்.

what reason of is seen covered uttarpradesh mosque
holi celebration twitter

இந்த விழாவுக்காகச் சென்ற ஆண்டைவிட, நடப்பாண்டில் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் திவேதி தெரிவித்துள்ளார். ஹோலிப் பண்டிகையை அமைதியாகக் கொண்டாடுமாறு மக்களை வலியுறுத்தும் அதேவேளையில், ஊர்வலத்திற்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திவேதி கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com