இந்தியா
"3-வது அலையை தடுக்க மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது?" - ராகுல் காந்தி கேள்வி
"3-வது அலையை தடுக்க மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது?" - ராகுல் காந்தி கேள்வி
டெல்டா பிளஸ் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மிகப்பெரிய அளவிலான பரிசோதனை நடத்தப்படாதது ஏன் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், தற்போதுள்ள தடுப்பூசி டெல்டா பிளஸ் வைரஸுக்கு எதிராக பயனளிக்கிறதா என்றும், இதுதொடர்பான தரவுகள் எப்போது கிடைக்கும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், 3-வது அலையை தடுப்பதற்கான என்ன திட்டம் உள்ளது எனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.