இந்திய இளைஞர்களின் மரணங்கள்.. வெளியான அதிர்ச்சி தரவுகள்!
2020 முதல் 2022ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த 15 முதல் 29 வயதிலான இளைஞர்களின் மரணங்களில் 17.1 விழுக்காடு மரணங்கள் தற்கொலையாக உள்ளன.
அதாவது இந்த காலகட்டத்தில் உயிரிழந்த இளைஞர்களில் ஆறில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 15.6% விழுக்காடு இளைஞர் மரணங்கள் சாலை விபத்துகளால் நிகழ்ந்துள்ளன. கடந்த இருபது ஆண்டுகளாகவே இளைஞர்கள் மரணத்தில் தற்கொலைகளே மிக அதிக பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.
உலக அளவிலான இளைஞர் மரணங்களில் தற்கொலை மரணங்கள் மூன்றாவது இடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. அனைத்து வயது இந்தியர்களின் மரணத்துக்கான காரணங்களில் தற்கொலை முதல் பத்து இடங்களில் இல்லை. ஆனால், இளைஞர்கள் மரணத்தில் முதல் இடம் வகிப்பது உடனடியாக சமூகமும் அரசுகளும் கவனம் செலுத்தி தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் 104 என்ற மனநல உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.