\
வயது? உயரம்?-மிஸ் யூனிவர்ஸ் குறித்து நெட்டிசன்கள் கூகுளில்அதிகம் தேடியது இதுதான்

வயது? உயரம்?-மிஸ் யூனிவர்ஸ் குறித்து நெட்டிசன்கள் கூகுளில்அதிகம் தேடியது இதுதான்

வயது? உயரம்?-மிஸ் யூனிவர்ஸ் குறித்து நெட்டிசன்கள் கூகுளில்அதிகம் தேடியது இதுதான்
Published on

நடப்பு ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் அழகி பட்டத்தை வென்றுள்ளார் ஹர்னாஸ் சாந்து. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர் ஒருவர் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ள நிலையில் அவர் குறித்து நெட்டிசன்கள், தேடு பொறியான கூகுள் தளத்தில் அதிகம் தேடியது இதுதான். 

கூகுள் தேடுபொறியில் ‘Harnaaz Sandhu’ என டைப் செய்தால் அவரது மதம், குடும்பம், உடல் எடை, உயரம், பிறந்த தேதி, வயது, பிகினி, போட்டோ, குடும்பம், பயோகிராபி, இன்ஸ்டாகிராம் பக்கம் மாதிரியானவை குறித்துதான் நெட்டிசன்கள் அதிகம் தேடி தெரிந்துக் கொண்டுள்ளார்கள் என தெரிகிறது. 

அதோடு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வெல்வதற்கு முன்னர் அவரை இன்ஸ்டாகிராமில் வெறும் 2.9 லட்சம் ஃபாலோயர்கள் தான் பின்தொடர்ந்து உள்ளார்கள். தற்போது அந்த எண்ணிக்கை 1.7 மில்லியனாக மாறியுள்ளது. மாடலான ஹர்னாஸ் இரண்டு பஞ்சாபி மொழி படங்களில் நடித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com