அயோத்தியில் அமைய இருக்கின்ற விக்ரஹத்தின் சிறப்பு என்னென்ன?

ராமர் ஆலயத்தில் மூன்று மூர்த்தி இருக்கிறது.
ராம பிரதிஷ்டை
ராம பிரதிஷ்டைபுதிய தலைமுறை

இன்று புதிதாக பிராண பிரதிஷ்டை செய்ய இருக்கின்ற அயோத்தி கோவிலுக்கு சென்று அங்கு அமைய இருக்கின்ற விக்ரஹங்களை பார்த்து திரும்பி இருக்கக்கூடிய டாக்டர் ரங்கம் (வேதவிற்பணர்) அவரிடம் ராமர் விக்ரஹம் பற்றி கேட்டபொழுது,

ரங்கம், வேதவிற்பணர்
ரங்கம், வேதவிற்பணர்

“ராமர் ஆலயத்தில் மூன்று மூர்த்தி இருக்கிறது. ஒன்று, ராமர் தனது தம்பிகளான, லெஷ்மண பரதன் சத்ருகணன் ஆகியோருடன் தவழ்கிற குழந்தையாகவும், இரண்டாவதாக கையில் சங்கு சக்ரம் ஏந்திய நிலையில் உற்சவ மூர்த்தியாகவும், மூன்றாவதாக மூலவர். இவரின் இடதுபுறம் சிவபெருமானும் வலதுபுறம் பிரம்ம தேவனும் மேலே சூரிய நாராயணராகவும் இருக்கிறார்.

இவரின் திருவடியின் ஒரு பக்கம் ஆஞ்சநேயரும் மறு பக்கம் கருடாழ்வாரும் இருக்கின்றனர். பொன்முறுவல் பூத்தபடி ஒருகையானது சின்முத்திரையை காட்டியபடியும் மறுகையில் வில்லையும் வைத்துக்கொண்டு அழகாக காட்சியளிக்கிறார்” என்று கூறுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com