மதுபான கொள்கை வழக்கு | முக்கிய கைதுகளும்... வழக்கு கடந்த வந்த பாதையும்...!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு கடந்த வந்த பாதையை பார்ப்போம்...
அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்pt desk

கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி டெல்லி அரசால் கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டது. 2022 ஆம் ஆண்டு ஜூலை 31 புகார் எழுந்ததையடுத்து கலால் கொள்கை டெல்லி அரசால் ரத்து செய்யப்பட்டது.

அதே ஆண்டு ஆகஸ்டு 17 ஆம் தேதி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து, 19 ஆம் தேதி மணீஷ் சிசோடியா இல்லத்தில் சிபிஐ சோதனை நடத்தியது. அதே மாதம் 22 ஆம் தேதி அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்தது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு
மதுபான கொள்கை முறைகேடு வழக்குpt desk

செப்டம்பர் 22 ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு தலைவர் விஜய் நாயர் சி.பி.ஐ மூலம் கைது செய்யப்பட்டார், தொடர்ந்து அக்டோபர் 17 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. 8மணி நேரம் விசாரணை நடத்தி, நவம்பர் 25 ஆம் தேதி 7 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவிக்கு சம்மன் அனுப்பி 26 ஆம் தேதி கைது செய்தது. 28 ஆம் தேதி துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சிசோடியா.

அரவிந்த் கெஜ்ரிவால்
மதுபான கொள்கை முறைகேட்டில் அப்ரூவலான நபர், தேர்தல் பத்திரம் மூலம் பாஜக-வுக்கு பல கோடி நன்கொடை!

அக்டோபர் 4ஆம் தேதி ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங்கின் வீடு மற்றும் அவருக்கு நெருங்கியவர் வீட்டில் சோதனை நடத்தியது அமலாக்கத்துறை.

தொடர்ந்து கடந்த 16 ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள பாரத ராஷ்டிர சமிதி தலைவர் கவிதாவின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. இதனை தொடர்ந்து தற்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்
Arvind Kejriwal கைது | “ஜனநாயக செயல்முறைக்கு அஞ்சுபவர்களின் கோழைத்தனம்” - தலைவர்கள் கடும் கண்டனம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com