கனிமொழி
கனிமொழிமுகநூல்

இந்தியாவின் தேசிய மொழி என்ன? ஸ்பெயினில் திமுக எம்பி கனிமொழி அளித்த பதில் வைரல்!

ஸ்பெயினில், ‛இந்தியாவின் தேசிய மொழி எது?'' என்று கேள்வி எழுப்பியதும், அதற்கு கனிமொழி கொடுத்த பதிலும் இணையத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது.
Published on

‛ஆபரேஷன் சிந்தூர்' பற்றி நட்பு நாடுகளிடம் எடுத்து கூறவும், பாகிஸ்தானின் பொய் பிரசாரங்களை முறியடிக்கவும் 7 எம்பிக்கள் குழுக்கள் வெளிநாடுகளில் பயணித்து வருகின்றன.

அதில், கனிமொழி தலைமையிலான குழுவும் ஒன்று. திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழுவில் சமாஜ்வாதி எம்பி ராஜீவ் ராய், தேசிய மாநாட்டு கட்சி எம்பி மியான் அல்தாப் அகமது, பாஜக எம்பி பிரிஜேஷ் சோவ்டா, ஆர்ஜேடி கட்சியின் பிரேம் சந்த் குப்தா, ஆம்ஆத்மியின் அசோக் குமார் மிட்டல், தூதர்கள் மங்சீவ் எஸ் புரி, ஜாவேத் அஷ்ரப் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவுக்கு 5 நாடுகள் ஒதுக்கப்பட்டது. ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லத்திவா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளை கனிமொழி தலைமையிலான குழுவினர் சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தவகையில், திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு ஸ்பெயினுக்கு சென்றது.

அப்போது, பாகிஸ்தானின் பயங்கரவாதம் குறித்தும், பயங்கரவாதத்துக்கு எதிரான ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றியும் கனிமொழி அந்தநாட்டின் பிரதிநிதிகளிடம் கூறினார்.

அங்கு, திமுக எம்பி கனிமொழியிடம், புலம்பெயர் இந்தியர் ஒருவர் இந்தியாவின் தேசிய மொழி குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு கனிமொழி எம்பி, ‛‛இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையிலும் ஒற்றுமையாக இருப்பது தான். இதுதான் உலகிற்கு இந்த குழு தரும் செய்தி. இதுவே இன்றைக்கு மிக முக்கியமான விஷயம்'' என்றார்.

கனிமொழி
ராணுவ வீரர்கள் குறித்த விவரங்கள்.. மத்திய அரசு விடுத்த முக்கிய வேண்டுகோள்!

இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்றே இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால், பலர் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று நம்பி வருகிறார்கள். இந்தநிலையில்தான், திமுக எம்பி கனிமொழியின் பதில் அனைவரின் கவனத்தையும் பெற்றது மட்டுமல்லாது, அவர் பதிலளித்த அடுத்த நொடியே அரங்கில் இருந்தவர்களின் கை தட்டலையும் பெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com