அகமதாபாத் விமான விபத்து
அகமதாபாத் விமான விபத்துமுகநூல்

அகமதாபாத் விமான விபத்து|’மீட்கப்பட்ட கருப்புப் பெட்டி’.. விபத்துக்கான உண்மையான காரணம் ?

கருப்புப்பெட்டி என்றால் என்ன? விமான விபத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு? விரிவாக பார்க்கலாம்.
Published on

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. கடந்த 12 ஆம் தேதியன்று, ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். 1 பயணி மட்டும் உயிர் பிழைத்த நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விமானம் மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியில் 7 க்கும் மேற்பட்ட மாணவர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், விமானம் விபத்துக்கான காரணம் என்னவாக இருக்கும் என்றும், பல யூகங்களும் , கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றனர்.

அகமதாபாத் விமான விபத்து
உயிர் பிழைத்த விஷ்வாஸ் குமார்... தந்தைக்கு செய்த வீடியோ கால்.. சில நொடிகளில் பரபர நிகழ்வுகள்

தரையைவிட்டு பறக்க தொடங்கிய விமானம் போதுமான உயரத்துக்கு மேலே எழுப்பவில்லை. அடுத்த சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து நொறுங்கி தீ விபத்துக்குள்ளானது. இதற்கு காரணம் தொழில்நுட்ப கோளாறா, விமானத்தின் என்ஜினில் பறவை மோதியதா, லேண்டிங் கியர் கோளாறா என்ற பல காரணங்களும் கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், சரியான காரணம் என்னவென்று தற்போதுவரை தெரியவில்லை. உண்மையை அறிவதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையில்தான், கருப்பு பெட்டி தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

கருப்புப்பெட்டி என்றால் என்ன? விமான விபத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு? விரிவாக பார்க்கலாம்.

கருப்புப்பெட்டி

Handout

கருப்புப் பெட்டி என்பது விமான விபத்துகள் குறித்த உண்மைகளைக் கண்டறிய விமானங்களில் வைக்கப்பட்டுள்ள ”மின்னணு சாதனமாகும்”.

டேவிட் வாரன் என்னும் ஆஸ்திரேலிய அறிஞர் 1954ஆம் ஆண்டு கருப்புப் பெட்டியை கண்டுபிடித்தார். 1954 ஆண்டு வரை விபத்தில் சிக்கிய 7 ஜெட் விமானங்களும், அதன் விபத்துக்களுக்கான காரணங்களை கண்டுபிடிக்க முடியாத சூழலே, டேவிட் வாரனை கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்க தூண்டுகோலாக அமைந்தது.

இரண்டு விதமான கருவிகள்

கருப்புப் பெட்டியில் டிஜிட்டல் விமான தரவு ரெக்கார்டர், காக்பிட் குரல் ரெக்கார்டர் என்ற இரண்டு விதமான கருவிகள் இருக்கும்.

டிஜிட்டல் விமான தரவு ரெக்கார்டர் என்பது விமானத்தின் உயரம், எரிபொருள் ஓட்டம் மற்றும் வானியல் குறித்த தரவுகளை பதிவு செய்யும்.

காக்பிட் குரல் ரெக்கார்டர் என்பது காக்பிட்டில் நடக்கும் விமானிகளின் உரையாடல்கள் மற்றும் அங்கு ஏற்படக்கூடிய அனைத்து வித ஒலிகளையும் பதிவு செய்யும்.

எல்லா சூழ்நிலைகளையும் சமாளிக்கும்

இவை அதீத வெப்பம், நெருப்பு, தண்ணீர் என அனைத்து விதமான அசாதாரண சூழ்நிலைகளிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். எந்த இடத்தில் விழுந்தாலும் அங்கிருந்து சமிக்கைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் தன்மை கொண்டது. இவை ஒளிரக்கூடிய ஆரஞ்சு நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

15 நாள்கள்

கருப்புப் பெட்டியில் இருக்கும் டிஜிட்டல் விமான தரவு ரெக்கார்டர்கள் 25 மணிநேர தரவுகளுக்கு போதுமான சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளன. ஆனால், CVR களில் 2 மணிநேர உரையாடல்கள் மட்டுமே பதிவு செய்யப்படும். அவை 30 நாள்களுக்கு அல்ட்ராசவுண்ட் சிக்னல்களை அனுப்பி கொண்டிருக்கும். 30 நாள்களுக்கு, நொடிக்கு ஒரு முறை சமிக்கை வெளியிட முடியும். கருப்புப் பெட்டிகளில் தரவுகளை மீட்டெடுத்து பகுப்பாய்வு செய்ய 15 நாள்கள் வரை பிடிக்கும்.

விபத்துக்கான உண்மை காரணம் என்ன?

விமான போக்குவரத்து கட்டுப்பாடு அறை மற்றும் விமானிகளுக்கு இடையிலான உரையாடல்களை காக்பிட் குரல் ரெக்கார்டர் மூலம் அறிந்துக் கொள்ளலாம். இந்தநிலையில், தற்போது அகமதாபாத் விமான விபத்து ஏற்பட்ட விமானத்தின் கருப்பு பெட்டியும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

தற்போது ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள இந்த பெட்டி ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இதன் பின்னரே, விபத்துக்கான உண்மையான காரணங்கள் என்னவென்று தெரியும் என்கிறார்கள் விமானத்துறை அதிகாரிகள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com