காஷ்மீர் பெண்கள் சர்ச்சை: ராகுலுக்கு வீடியோ மூலம் ஹரியானா முதல்வர் பதில்

காஷ்மீர் பெண்கள் சர்ச்சை: ராகுலுக்கு வீடியோ மூலம் ஹரியானா முதல்வர் பதில்
காஷ்மீர் பெண்கள் சர்ச்சை: ராகுலுக்கு வீடியோ மூலம் ஹரியானா முதல்வர் பதில்

காஷ்மீர் பெண்கள் குறித்து ஹரியானா முதலமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக செய்திகள் வெளியான நிலையில், அதனை தெளிவுபடுத்தும் விதமாக ட்விட்டரில் அவர் வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

ஹரியானா மக்கள் இனி காஷ்மீரி பெண்களை எளிதாக திருமணம் செய்து கொள்ளலாம் என அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் பேசியதாக செய்திகள் வெளியாகின. இதற்குப் பலதரப்பிலிருந்து எதிர்ப்புகளும் கிளம்பின. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பை பதிவிட்டிருந்தார். அதில், “காஷ்மீர் பெண்கள் குறித்த ஹரியானா முதலமைச்சரின் கருத்து இழிவானது. இது ஆர்எஸ்எஸ்-லில் இத்தனை காலம் அவர் எடுத்துக்கொண்ட பயிற்சியை காட்டுகிறது. பெண்கள் ஆண்களுக்குச் சொந்தமான சொத்து அல்ல” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் பேசிய வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு ராகுல்காந்திக்கு மனோகர் லால் கட்டார் பதிலடி கொடுத்தள்ளார். அதில் இது திரிக்கப்பட்ட செய்தி எனத் தெரிவித்துள்ளார். வீடியோவில், “ஹரியானாவில் பெண் சிசுக் கொலை என்பது அதிகம் பேசப்படும் விசயம். அதற்காகவே நாம் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். 1000 ஆண்களுக்கு 850 பெண்கள் என்று இருந்த நிலையில், பாலின விகித விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் காரணமாகத்தான்  தற்போது 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் உள்ளனர் என்ற நிலை மாறியுள்ளது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும், ஆண்- பெண் பாலின விகிதம் எதிர்காலத்தில் எவ்வித பிரச்னையை உண்டு பண்ணும் என்பதை புரிந்து கொள்ள முடியும். அமைச்சர் தன்கர் பேசும் போது பீகாரில் இருந்து பெண்களை நாம் கொண்டு வருவோம் என்றார். தற்போது மக்கள் சிலர் காஷ்மீரில் இருந்து பெண்களை கொண்டுவந்துவிடலாம் என்று சொல்கிறார்கள். இதிலுள்ள நகைச்சுவையை தவிர்த்து, பாலின விகிதம் சரியாக இருந்தால்தான் சமூகத்தில் சமநிலை நிலவும்” எனத் தெரிவித்துள்ளார்.  

ஹரியானா முதல்வர் ‘பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ’ அதாவது மகளை பாதுகாப்போம் மகளை படிக்க வைப்போம் என்ற திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதுதான் இவ்வாறு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com