\
தெலுங்கு நடிகர் ஹரிகிருஷ்ணா மரணத்தில் நடந்தது என்ன?

தெலுங்கு நடிகர் ஹரிகிருஷ்ணா மரணத்தில் நடந்தது என்ன?

தெலுங்கு நடிகர் ஹரிகிருஷ்ணா மரணத்தில் நடந்தது என்ன?
Published on: 

நடிகர் ஹரிகிருஷ்ணா விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

மறைந்த ஆந்திர முதலமைச்சர் என்.டி.ஆரின் மகனும் நடிகருமான ஹரிகிருஷ்ணா சீட் பெல்ட் அணியாததே கார் விபத்தில் பலியானதற்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹரிகிருஷ்ணா ஓட்டிச்சென்ற கார் நல்கொண்டா அருகே நெடுஞ்சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த ஹரிகிருஷ்ணா, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஐதராபாத் காவல்துறையினர், ஹரிகிருஷ்ணா சீட் பெல்ட் அணியாததே காரணம் என அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும் கார் ஓட்டும் போது சாலையில் வளைவு இருப்பதை கவனிக்காமல் தண்ணீர் கேட்டு ஹரிகிருஷ்ணா திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது கார் அவரது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தடுப்பில் மோதியதாகவும் இந்த வேகத்தில் காரின் கதவு திறந்ததால் அவர் வெளியே தூக்கி வீசப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அவருடன் பயணித்த மற்ற இருவரும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com