சுவாசிப்பதற்கான காற்றின் தரம் எப்படி இருக்க வேண்டும்..? என்ன சொல்கிறது தரவுகள்..?

சுவாசிப்பதற்கான காற்றின் தரம் எப்படி இருக்க வேண்டும்..? என்ன சொல்கிறது தரவுகள்..?

சுவாசிப்பதற்கான காற்றின் தரம் எப்படி இருக்க வேண்டும்..? என்ன சொல்கிறது தரவுகள்..?
Published on

தலைநகர் டெல்லியில் தீபாவளிக்கு பிறகு கடுமையான காற்று மாசு நிலவி வருகிறது.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குருகிராம், காசியாபாத்,‌ நொய்டா, பரிதாபாத் என எல்லா பகுதிகளுமே கடுமையான காற்று மாசினால் மோசமான விளைவுகளை சந்தித்து வருகின்றன. டெல்லியில் நிலவும் இத்தகைய மோசமான காற்றினால் டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் நுரையீரல் சம்பந்தமான பாதிப்புகளை எதிர் கொள்ள வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இந்த காற்று மாசினால் வீடு இல்லாமல் தெருவோரங்களில் வசிக்கக்கூடிய மக்கள், ரிக்ஷா மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், நடைபாதை வியாபாரிகள், குழந்தைகள், வயதானவர்களே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்தது, அதிக மக்கள்தொகை, கடுமையான வாகன நெரிசல், அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை வயல்வெளிகளில் எரிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் தலைநகர் டெல்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பயிர் கழிவு அழிப்பினை முழுமையாக தடுக்காத வரை காற்றுமாசு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் ஒரு மனிதன் சுவாசிப்பதற்கான காற்றின் தரம் எப்படி இருக்க வேண்டும்? அதன் தரம் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? என்பது தொடர்பான விவரங்கள் தெரிய வந்துள்ளன. ஜீரோ முதல் 50 வரை தரக்குறியீடு இருந்தால் அது சுவாசிக்க நல்ல காற்று. ஆனால் டெல்லியில் மிக மோசமான அளவாக ஆயிரத்திற்கும் மேல் காற்றின் தரக் குறியீடு உள்ளது. இது எந்த அளவிற்கு மோசமானது என்றால் ஒரு நாளைக்கு 40 முதல் 50 சிகரெட்டுகளை ஒருவர் பிடித்தால் எந்த அளவிற்கு தீங்கு ஏற்படுமோ அந்த அளவிற்கு டெல்லியிலுள்ள காற்றினை சுவாசிப்பதால் ஏற்படுகிறது.

காற்று மாசினை கண்டறியும் போது காற்றில் உள்ள நுண்துகள்கள் பி.எம். 2.5 என்பதை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. அதாவது ஒரு மீட்டர்‌ சதுர பரப்பளவில் 2.5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான அளவு கொண்ட நுண்துகள் எத்தனை கிராம் இருக்கிறது என்பதை கணக்கிட வேண்டும். ஒரு மீட்டர்‌ சதுர பரப்பளவில் 10 மைக்ரோ கிராம் நுண்துகள்கள் இருந்தால் அது சுவாசிக்க ஏற்ற காற்று. ஆனால் டெல்லியில் ஒரு மீட்டர்‌ சதுர பரப்பளவில் சராசரியாக 450 மைக்ரோ கிராம் நுண்துகள்கள் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com