வேளாண் சட்டங்கள், டெல்லி வன்முறை... ஜனாதிபதி உரையில் கூறியது என்ன?

வேளாண் சட்டங்கள், டெல்லி வன்முறை... ஜனாதிபதி உரையில் கூறியது என்ன?
வேளாண் சட்டங்கள், டெல்லி வன்முறை... ஜனாதிபதி உரையில் கூறியது என்ன?

2021 ஆம் ஆண்டிற்கான நடாளுமன்ற கூட்டுக் கூட்டத் தொடரை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணி - செங்கோட்டை வன்முறை குறித்தும் பேசினார். அதன் முக்கிய அம்சங்கள்: 

* “கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேசியக் கொடியும், குடியரசு தினம் போன்ற புனிதம் மிகுந்த நாளும் அவமதிக்கப்பட்டு உள்ளன. நமக்கு கருத்துச் சுதந்திரத்தை வழங்கும் அரசியலமைப்புதான் சட்டம் மற்றும் விதிகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்பதையும் நமக்கு போதிக்கிறது.  அதை நிலைநாட்டும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

* 3 வேளாண் சட்டங்கள் குறித்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்படும்.

* விவசாயிகள் தங்களது விளை பொருட்களுக்கு உரிய விலையை உறுதி செய்வதே அரசின் கொள்கையாகும்.

* வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று, மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு வேளாண் சட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

* ஏழு மாதத்திற்கு முன்பு நிறைவேற்றப்பட்ட இந்த வேளாண் சட்டங்கள் மூலம் சுமார் 10 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.  

* பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதிக்கான திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் 1,130,00 கோடி ரூபாய் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. 

* விவசாயிகள் தங்களது பொருட்களுக்கு உரிய விலையை பெறுவதை அரசு உறுதி செய்யும். வேளாண் சட்டங்கள் தொடர்பான சில முரண்பாடான தகவல்களை நீக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது.”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com