டெல்லி டிராக்டர் பேரணி: காவல்துறை விதித்துள்ள முக்கிய நிபந்தனைகள்- விவரம்!

டெல்லி டிராக்டர் பேரணி: காவல்துறை விதித்துள்ள முக்கிய நிபந்தனைகள்- விவரம்!
டெல்லி டிராக்டர் பேரணி: காவல்துறை விதித்துள்ள முக்கிய நிபந்தனைகள்- விவரம்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் இன்று எந்தெந்த வழித்தடங்களில் டிராக்டர் பேரணி நடைபெற இருக்கிறது? டிராக்டர் பேரணிக்கு போலீசார் விதித்துள்ள நிபந்தனைகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணிக்கு போலீஸார் விதித்துள்ள முக்கிய நிபந்தனை குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பிறகே பேரணியை தொடங்க வேண்டும் என்பதே.

மத்திய டெல்லி பகுதிக்குள் பேரணி நடத்தக்கூடாது. பேரணி செல்லும் வழியில் தர்ணா, ஆர்ப்பாட்டம், சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்த அனுமதி இல்லை. மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பேரணிக்கு அனுமதி. பேரணியின் தொடக்கத்தில் இருந்து முடியும் வரை வேறு எந்த வாகனங்களையும் சேர்க்க கூடாது. பொது மக்களின் வாகனங்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பேரணி நடத்த வேண்டும். பேரணி செல்லும் போது டிராக்டர்கள் நிற்க அனுமதி இல்லை. ஒவ்வொரு டிராக்டரிலும் ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி. பேரணியின் போது மத அடையாளங்கள் உட்பட துப்பாக்கிகள், வாள், ஈட்டி போன்ற எந்த ஆயுதங்களும் எடுத்து செல்லக் கூடாது. இத்தகைய நிபந்தனைகள் அடங்கிய கோப்பில் கையெழுத்திடும் சங்கங்கள் மட்டுமே பேரணியில் பங்கேற்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராக்டர் பேரணி டிக்ரி, சிங்கு, காசிப்பூர் வழியாக டெல்லிக்குள் நுழைய உள்ளது. ஹரியானா எல்லையான சிங்குவில் இருந்து தொடங்கும் பேரணி கன்ஜாவாலா , பவானா , அவுசான்டி எல்லை , கே.எம்.பி.எக்ஸ்பிரஸ் வழியாக மீண்டும் சிங்குவை சென்றடையும்.

திக்ரி எல்லையில் இருந்து தொடங்கும் பேரணி நாக்லோ , நஜாப்கர் , மேற்கு எல்லைப் பகுதி எக்ஸ்பிரஸ் வே வழியாக மீண்டும் திக்ரியை சென்றடையும். மூன்றாவதாக டெல்லி - உத்தப்பிரதேச எல்லையான காஜிப்பூர் எல்லையில் இருந்து தொடங்கும் பேரணி குன்ட்லி , காஜியாபாத் , பல்வால் எக்ஸ்பிரஸ் வே வழியாக சென்று மீண்டும் காஜிப்பூரை அடையும். சுமார் 100 கிலோமீட்டருக்கு நடைபெறும் இந்த பேரணி மாலை ஆறு மணிக்கு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேரணியில் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்க உள்ளதாக பஞ்சாப் ஜமூரி கிசான் சபாவின் பொதுச்செயலர் குல்வந்த் சிங் சாந்து தெரிவித்துள்ளார். பேரணியை சரியான முறையில் ஒருங்கிணைக்கக் கண்காணிப்பு அறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையிலும் மருத்துவர்கள், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட 40 பேர் இருப்பார்கள். மருத்து உதவிக்காக 40 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் பேரணி நடைபெறும் இடங்களில் நிறுத்தி வைக்கப்படும். பாதுகாப்புப் பணிகளை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களைக் கவனித்துக்கொள்வார்கள் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com