தேசிய மருத்துவ ஆணையத்திற்கு சர்வதேச அங்கீகாரம்..இனி இந்த நாடுகளில் முதுகலை மருத்துவம் கற்க வாய்ப்பு!

இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு, மருத்துவக் கல்விக்கான உலகக் கூட்டமைப்பானது, அங்கீகாரம் வழங்கியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
NMC, WFME
NMC, WFMEட்விட்டர்

இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு (National Medical Commission (NMC)), மருத்துவக் கல்விக்கான உலகக் கூட்டமைப்பானது (World Federation for Medical Education (WFME)), அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், இது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இதன்மூலம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் உயர்கல்வியை இந்திய மாணவர்கள் மேற்கொள்ளலாம். இது சர்வதேச அளவில் இந்தியாவுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 706 மருத்துவ கல்லூரிக்கும் இந்த அங்கீகாரம் பொருந்தும் என்பதால் நாட்டின் எந்த மூலையில் பயிலும் மருத்துவ மாணவர்களாக இருந்தாலும் அவர்கள் மேற்குறிப்பிட்ட நாடுகளில் உயர்கல்வியை பயிலலாம். இது நமது நாட்டின் மருத்துவ மாணவர்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மருத்துவக் கல்விக்கான உலகக் கூட்டமைப்பு (WFME) என்பது உலகளவில் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக இயங்கி வரும் ஒரு உலகளாவிய அமைப்பாகும்.

முன்னர், இந்த மருத்துவக் கல்விக்கான உலகக் கூட்டமைப்பின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஒரு மருத்துவக் கல்லூரி ₹4,98,5142 ($60,000) கட்டணம் செலுத்த வேண்டும். அங்கீகாரம் வழங்க வருகை தரவிருக்கும் குழுவின் செலவுகள் மற்றும் அவர்களின் பயணம் மற்றும் தங்குமிடம் போன்ற செலவுகள் தனி. அதாவது, இந்தியாவில் உள்ள 706 மருத்துவக் கல்லூரிகள் உலகக் கூட்டமைப்பு அங்கீகாரத்திற்கு விண்ணப்பிப்பதற்கான மொத்தச் செலவு தோராயமாக ₹351.9 கோடி ($4,23,60,000) இருக்கும். தற்போது தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும், WFMEக்கு அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, முதுநிலை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்யமாக எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ். படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கெனவே 2 சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்தநிலையில், 3வது சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணாக்கர்களுக்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பேண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com