Humayun Kabirtook BJP issue AIMIM to Contest Alone
mamata & modiweb

மேற்கு வங்கத் தேர்தல் | 6 மணிவரை 91.35% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்கத் தேர்தலில் 6 மணி நிலவரப்படி 91.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Published on
Summary

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று 16 மாவட்டங்களில் 152 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி 91.35% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குபதிவு விறுவிறுப்பாக நட்ந்து வருகிறது. முதல் கட்டத் தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 91.35 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Mamata said After Bengal win, we will unite India and capture Delhi
மம்தா பானர்ஜிPt web

மேற்​கு​ வங்​கத்​தில் மொத்​தமுள்ள 294 சட்​டப்​பேர​வைத் தொகுதிகளுக்கு இன்று மற்றும் ஏப்ரல் 29 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்​டங்​களாக தேர்​தல்கள் நடக்கிறது. அதன்படி இன்று (ஏப்ரல் 23) 16 மாவட்டங்களில் 152 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

152 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில், 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ள சூழலில், 3.6 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.

Humayun Kabirtook BJP issue AIMIM to Contest Alone
4 முனைப் போட்டி நிலவும் மேற்குவங்கம்.. கூட்டணி நிலவரமும், நட்சத்திர வேட்பாளர்களும்.!

ஒரு சில தொகுதிகளில் பதற்றம் நிலவினாலும், பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயகக் கடமைகளை ஆற்றினர்.

மம்தா பானர்ஜி
Mamata Banerjeeweb

5 மணி அளவில் வாக்குப்பதிவு குறித்து பேசியிருக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தனக்கு எந்தப் பதவியிலும் விருப்பமில்லை என்றும், மத்தியில் உள்ள பாஜக ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்பதே தனது ஒரே விருப்பம் என்றும் கூறியிருக்கிறார்.

வாக்குப்பதிவு குறித்து பேசியிருக்கும் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி தனது கணிப்பின்படி வாக்குப்பதிவு சுமார் 90 சதவீதமாக இருந்ததாகவும் முதல் கட்ட வாக்கெடுப்பில் பாஜக 125 இடங்களை வெல்லும் என்றும் கூறியுள்ளார்.

Humayun Kabirtook BJP issue AIMIM to Contest Alone
மேற்கு வங்கத்தில் 30 ஆண்டுகளில் தலைகீழ் மாற்றம்.. திரிணாமுல் காங்கிரஸின் எழுச்சி.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com