#bypollresults| மேற்கு வங்க தொகுதிகள் இடைத்தேர்தல்.. தொடர்ந்து முன்னிலையில் பாஜக!
2026 சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில், முதலமைச்சர் சுவேந்து அதிகாரி நந்திகிராம் மற்றும் பவானிபூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று, பவானிபூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டதால் நந்திகிராம் தொகுதி காலியானது. அதேபோல், 'ஆம் ஜனதா வளர்ச்சி கட்சி' (AJUP) தலைவர் ஹுமாயூன் கபீர் ரெஜிநகர் மற்றும் நௌதா ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று, நௌதா தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டதால் ரெஜிநகர் தொகுதி காலியானது. இதையடுத்து, இந்த இரு தொகுதிகளுக்கும் கடந்த 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன்படி, நந்திகிராமில், மே 6 அன்று சுட்டுக் கொல்லப்பட்ட அதிகாரியின் முன்னாள் உதவியாளர் சந்திரநாத் ரத்தின் தாயார் ஹசிராணி ரத்தை பாஜக வேட்பாளராக நிறுத்தியது.
திரிணாமுல் காங்கிரஸின் வேட்பாளர் சஞ்சிதா பிரதான் டே விலகியதை அடுத்து, காங்கிரஸின் மிலன் பிரதானுக்கு மம்தா பானர்ஜி ஆதரவளித்தார். பின்னர் நடைபெற்ற நந்திகிராம் தொகுதியில் 80.69% வாக்குகள் பதிவாகின. இந்த தொகுதிக்கு, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை பாஜகவே முன்னிலையில் இருந்துவருகிறது. பாஜக வேட்பாளர் ஹசிராணி ரத் முன்னிலையில் உள்ளார். அவர் 9,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இரண்டாவது காங்கிரஸ் வேட்பாளர் உள்ளார்.
அதேபோல், ரெஜிநகர் தொகுதியில் பாஜகவின் சகாராவ் சர்க்காரை எதிர்த்து AJUP கட்சியின் தலைவர் ஹுமாயூன் கபீர் மகன் கோலம் நபி ஆசாத் களமிறக்கப்பட்டார். மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இத்தொகுதியில் ரபியுல் ஆலம் சௌத்ரியை வேட்பாளராக நிறுத்தியது. மேலும், காங்கிரஸின் முகமது அப்துல்லாஹில் காஃபி, சிபிஐ(எம்)-ன் சையத் ஆசாத் அலி ஆகியோரும் களத்தில் உள்ளனர்.
இங்கு, 79.90% வாக்குகள் பதிவாகின. தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கைபடி, இந்தத் தொகுதியிலும் பாஜக வேட்பாளர் சங்கரவ் சர்க்கார் முன்னிலையில் உள்ளார். அவர், 16,550க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் நபி ஆசாத் உள்ளார்.

