மேற்கு வங்கமும் நோபல் பரிசும் !

மேற்கு வங்கமும் நோபல் பரிசும் !
மேற்கு வங்கமும் நோபல் பரிசும் !

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்தியரான அபிஜித் பானர்ஜிக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிகமாக நோபல் பரிசு வென்றவர்களில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம்.

2019-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்தியரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டுஃப்லோ, அமெரிக்கரான மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை இந்தியர்களில் சிலருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டாலும், அதில் பெரும்பாலானாவர்கள் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அந்த அளவுக்கு நோபல் பரிசுக்கும், மேற்குவங்கத்துக்கும் இணைபிரியா தொடர்பு இருக்கிறது.

இந்தியா சார்பில் முதல்முறையாக நோபல் பரிசு வென்ற ரவீந்திரநாத் தாகூர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். கீதாஞ்சலி கவிதை தொகுப்பிற்காக இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1913-ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது. அடுத்தாக 1930-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு திருச்சி அருகே உள்ள திருவானைக்காவலில் பிறந்த சர் சி.வி. ராமனுக்கு வழங்கப்பட்டது. திருச்சியை சேர்ந்தவராக இருந்தாலும், சர்.சி.வி.ராமன் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். ராமன் விளைவை கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது தான் சர் சி.வி.ராமன் கண்டுபிடித்தார். 1979 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவும் மேற்குவங்கத்தில் வாழ்ந்தவர் தான்.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்ற அமர்த்தியா சென்னும் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் தான். 1902-ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ரொனால்டு ராஸ் பிரிட்டனை சேர்ந்தவர் என்றாலும், 1898 ஆம் ஆண்டிலேயே கொல்கத்தா வந்து சேர்ந்துவிட்டார். கொசுக்களால் தான் மலேரியா நோய் பரவுகிறது என்பதை ரொனால்டு ராஸ் கண்டுபிடித்தார். இதற்காகவே அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இப்படி மேற்கு வங்கத்திற்கும், நோபல் பரிசுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து தொடர்பு ஏற்பட்டு வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com