டெல்லிக்கு 3 நாள் பயணம்: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கிறாரா மம்தா?

டெல்லிக்கு 3 நாள் பயணம்: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கிறாரா மம்தா?

டெல்லிக்கு 3 நாள் பயணம்: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கிறாரா மம்தா?
Published on

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லிக்கு 3 நாள் பயணமாக இன்று செல்கிறார். எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்களை இப்பயணத்தின்போது மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் மம்தா பானர்ஜி சந்திப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக வலுவான எதிரணியை உருவாக்க மம்தா முயற்சி செய்து வரும் நிலையில் அவரது டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

இப்பயணத்தின்போது பிரதமர் மோடியையும் வரும் புதன்கிழமை மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார். குடியரசுத் தலைவரை சந்திக்கவும் மம்தா நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com