பவானிபூர் இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

பவானிபூர் இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
பவானிபூர் இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி களமிறங்கியுள்ள பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில் 57% வாக்குகள் பதிவாகிய நிலையில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பவானிபூர் இடைத்தேர்தலில் வென்றால் மட்டுமே முதலமைச்சர் பதவியில் மம்தா பானர்ஜி நீடிக்க முடியும் என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் பிரியங்கா டிப்ரிவால் போட்டியிட்டுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் உள்ளூர் காவல் துறையினருடன் மத்திய துணை ராணுவப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் பவானிபூரை தவிர இடைத்தேர்தல் நடந்த சம்சர்கன்ஞ், ஜாங்கிபூர் தொகுதிகளில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன. காலை 11 மணிக்குள் தேர்தல் முடிவுகளின் முன்னணி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com