மேற்கு வங்க இடைத்தேர்தல்: மம்தாவுக்கு எதிராக போட்டியில்லை - காங்கிரஸ்

மேற்கு வங்க இடைத்தேர்தல்: மம்தாவுக்கு எதிராக போட்டியில்லை - காங்கிரஸ்

மேற்கு வங்க இடைத்தேர்தல்: மம்தாவுக்கு எதிராக போட்டியில்லை - காங்கிரஸ்
Published on
மேற்கு வங்க இடைத்தேர்தலில், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் வருகிற 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பவானிபூர் தொகுதியில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நிலையில், வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.
மம்தாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவோம் என மாநில காங்கிரஸார் கூறிவந்த நிலையில், அகில இந்திய தலைமை கேட்டுக் கொண்டதால், தற்போது வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என கூறியுள்ளது. அதேநேரத்தில் மம்தாவுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட போவதில்லை என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com