மே.வங்கம்: விமான நிலையத்தில் ‘போலி’ ஆதார் அட்டையுடன் பிடிபட்ட 2 சீனர்கள்

மே.வங்கம்: விமான நிலையத்தில் ‘போலி’ ஆதார் அட்டையுடன் பிடிபட்ட 2 சீனர்கள்

மே.வங்கம்: விமான நிலையத்தில் ‘போலி’ ஆதார் அட்டையுடன் பிடிபட்ட 2 சீனர்கள்
Published on

போலி ஆதார் அட்டைகளுடன் பயணித்ததாகக் கூறப்படும் இரண்டு சீன நாட்டை சேர்ந்த நபர்கள், செவ்வாய்க்கிழமை காலை மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் உள்ள பாக்டோகிரா விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சீன நபர்களின் போலி ஆதார் அட்டைகளில் உத்தரபிரதேச முகவரிகள் இருந்தன. மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) பணியாளர்களால் கைது செய்யப்பட்ட இருவரும் உத்தரபிரதேசத்தில் காஜியாபாத்துக்கு செல்வதாக தெரிவித்தனர்.

இந்த நபர்கள் ஜாங் ஜுன் (39), கைலேங் (42) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் பயண ஆவணங்களை சரிபார்த்த அதிகாரிகள் மார்ச் 3 முதல் மார்ச் 14 வரை காத்மாண்டுவிலிருந்து கராச்சிக்கு இடையே பயணம் செய்ததாக தெரிவித்தனர்.

சிலிகுரியின் துணை போலீஸ் கமிஷனர் குன்வர் பூசன் சிங் கூறுகையில், “இந்த இரண்டு சீன பிரஜைகளின் ஆவணங்களில் முரண்பாடுகள் இருந்ததால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், இவர்களின் ஆவணங்களை சரிபார்க்கிறோம். ஒரு முழுமையான விசாரணைக்குப் பிறகு, சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கைத் தொடர்வோம்என தெரிவித்தனர்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com