ஆந்திரா: மணமகனின் கண்களை துணியால் கட்டி மணமகள் நடத்திய கொடூரம்
தனக்கு விருப்பமில்லாமல் திருமண ஏற்பாடு செய்ததால் மணமகனின் கழுதை மணமகள் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தை சேர்ந்த ராமா நாயுடு, ஹைதராபாத்தில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் (சி.எஸ்.ஐ.ஆர்.) விஞ்ஞானியாக உள்ளார். இவருக்கு, அதே மாவட்டத்தில் உள்ள சோடாவரத்தை சேர்ந்த புஷ்பா (வயது 22) என்பவருடன் அடுத்த மாதம் திருமணம் நடப்பதாக இருந்தது.
இந்நிலையில் புஷ்பா நேற்று முன்தினம் ராமா நாயுடுவை பெற்றோருக்கு தெரியாமல் ரகசியமாக சந்திக்க விரும்புவதாக கூறி உள்ளார். இதை ஏற்று சோடாவரம் வந்த அவரை புஷ்பா மலைக்கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ராமா நாயுடுவுக்கு பரிசு தருவதாக கூறிய புஷ்பா அவரது கண்களை துணியால் கட்டினார். பின் ராமா நாயுடுவின் கழுத்தை, கத்தியால் அறுத்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், புஷ்பாவை கைது செய்தனர். விசாரணையில் ராமா நாயுடுவை திருமணம் செய்து கொள்ள விரும்பாத புஷ்பா அதுகுறித்து தன் பெற்றோரிடம் கூறி உள்ளார். அவர்கள் கண்டு கொள்ளாததால் மணமகனை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதையும் படிக்கலாம்: அனுமன் ஜெயந்தி விழா கலவரம் - அறிக்கை தாக்கல் செய்தது டெல்லி காவல்துறை