கல்யாண உற்சவ திருவிழா: சாமிக்கும் சிறுமிக்கும் நடந்த வினோத திருமணம்

கல்யாண உற்சவ திருவிழா: சாமிக்கும் சிறுமிக்கும் நடந்த வினோத திருமணம்
கல்யாண உற்சவ திருவிழா: சாமிக்கும் சிறுமிக்கும் நடந்த வினோத திருமணம்

பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் சம்பிரதாயத்தின் அடிப்படையில் வெங்கடேஸ்வர சாமிக்கு சிறுமியுடன் திருமணம் நடைபெற்றது.

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ராயதுர்க்கம் பிரசன்ன வெங்கடேஸ்வரர் சுவாமி கோயிலில் கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது பல ஆண்டுகளாக சம்பிரதாயத்தில் இருக்கும் நடைமுறையின்படி ராயதுர்க்கத்தை சேர்ந்த ரமேஷ், ஜெயம்மா தம்பதியின் எட்டு வயது மகளான மௌனிகா உடன் வெங்கடேஸ்வர சாமிக்கு திருமணம் நடத்தப்பட்டது.

இந்த கோயிலில் கல்யாண உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கோயில் அர்ச்சகர் வேத மந்திரங்களை ஓதி தாலி கயிறை எடுத்து சிறுமியின் கழுத்தில் தொட்டு, பின்னர் உற்சவரின் திருவடியில் வைத்து ஆசி பெற்று சிறுமியின் தாயிடம் கொடுத்தார்.

தொடர்ந்து சிறுமியின் தாய் ஜெயம்மா தன்னுடைய மகள் கழுத்தில் தாலியை கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பிரசன்ன வெங்கடேஸ்வரர் கல்யாண உற்சவத்தின் போது மணமகளாக இடம்பெறும் சிறுமிக்கு மிக சிறப்பான இல்வாழ்க்கை அமையும் என்பது அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com