
கேரளாவில் விதவிதமான திருமண போட்டோசூட்கள் தற்போது பிரபலமாகிவருகின்றன. அந்த வரிசையில் இப்போது மணப்பெண்ணும், மணமகனும் ஆட்டோ டிரைவர்போல எடுத்த போட்டோசூட் மிகவேகமாக வைரலாகி வருகிறது.
மணமக்கள் இந்த போட்டோசூட்டில் நிஜமாகவே ஆட்டோ ஸ்டாண்டில் காக்கி உடை, வேட்டி அணிந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்கள். இவர்கள் ஆட்டோ டிரைவர்களுடன் பேசுவது, பேப்பர் படிப்பது, பரமபதம் விளையாடுவது என்று விதவிதமான ஸ்டில்களுடன் கலக்குகிறார்கள்.
ஏற்கனவே கொத்தனார், கட்டிடப்பணியாளர் போல ஒரு மணமக்கள் எடுத்திருந்த போட்டோசூட் இணையத்தில் வைரலான நிலையில் இந்த புகைப்படங்களும் பரபரப்பாக அனைவராலும் பகிரப்பட்டுவருகிறது.