ஷர்துல் தாக்கூருக்கு டும்.. டும்.. டும்! திருமண நாளை உறுதி செய்த காதலி!
இந்தியா கிரிக்கெட் பிரியர்கள் அதிகம் இருக்கும் நாடு. தங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் மீது அதிக அளவு ஆர்வத்தை வெளிப்படுத்துவார்கள். ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்களைப் பற்றி,விளையாட்டு முதல் தனிப்பட்ட வாழ்க்கை வரை, குறிப்பாக அவர்களின் காதல் விவகாரங்கள் பற்றிய ஒவ்வொரு சிறிய விவரங்களையும் தெரிந்து கொள்ள அதிகம் விரும்புகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகப் பல பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்போது ஷர்துல் தாக்கூர் அவ்வரிசையை இணையவுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஷர்துல் தாக்கூர். தற்போது இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டராகவும் , அமெரிக்கா லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேச அணியுடனான தொடரில் கூட இந்திய அணியின் முன்னணி பவுலராகவும் செயல்பட்டு வருகிறார்.
ஷர்துல் தாக்கூரும்,மும்பையில் ஆல் தி பேக்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் மித்தாலி பருல்கரும் நீண்ட கால நண்பர்கள். இருவருக்கும் கடந்தாண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. டி02 உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் திருமணம் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது திருமண தேதியை மித்தாலி உறுதி செய்துள்ளார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி மும்பையின் கர்ஜத்தில் திருமணம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். "ஆரம்பத்தில், நாங்கள் கோவாவில் ஒரு டெஸ்டினேஷனில் திருமணத்தை நடத்த விரும்பினோம், ஆனால் போக்குவரத்துக்குச் சிக்கல் மற்றும் பல காரணங்களால் மும்பையில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்; என்னுடைய வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்து கொண்டிருக்கிறது. அவ்வளவு மகிழ்ச்சியில் இருக்கிறேன். தொடர்ச்சியாக அவருக்கு போட்டிகள் இருக்கிறது. பிப்ரவரி 24 ஆம் தேதி வரை அவர் விளையாடுகிறார். பின்னர், பிப்ரவரி 25 ஆம் தேதி திருமண நிகழ்ச்சியில் இணைந்து கொள்வார். " என்றார் மித்தாலி.
அருணா ஆறுச்சாமி