இந்தியா
“மீண்டும் குமாரசாமியுடன் இணைந்து ஆட்சி அமைக்கத் தயார்” - சித்தராமையா
“மீண்டும் குமாரசாமியுடன் இணைந்து ஆட்சி அமைக்கத் தயார்” - சித்தராமையா
கர்நாடகாவில் இடைத்தேர்தல் முடிவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், மீண்டும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் சேர்ந்து ஆட்சி அமைக்கத் தயார் என காங்கிரஸ் கூறியுள்ளது.
கர்நாடகாவில் ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த இடங்களுக்கு வருகிற 15ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதில் குறைந்தது 7 இடங்களில் வெற்றி பெற்றால்தான் ஆட்சியைத் தக்கவைக்க முடியும் என்ற சூழல் பாஜகவுக்கு உள்ளது.
இந்நிலையில், எடியூரப்பா ஆட்சி கவிழ்ந்தால், மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயார் என சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே, பரமேஸ்ரவா ஆகிய மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.
இடைத்தேர்தலில் காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.