சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு

சபரிமலை கோயில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத வழிபாட்டுக்காக நேற்று முன் தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கோயிலுக்கு பெண்கள் சிலர் நேற்று சென்றனர். ஆனால் கோயிலுக்குச் சென்ற பெண்களை வழியிலேயே போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவியது.

இந்நிலையில் பலத்த பாதுகாப்போடு சென்ற இரண்டு பெண்களையும் சபரிமலை சந்நிதானத்தின், கீழ்பகுதியில் உள்ள நடைப்பகுதியில் திரளாக திரண்ட பக்தர்கள் அவர்களை தடுத்தி நிறுத்தினர். பெண்களை வெளியேற்றக்கோரி பக்தர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இரு பெண்களையும் திருப்பி அனுப்ப போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. 

மேலும் சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்வது தொடர்பாக திருவனந்தபுரத்தில் தேவசம் போர்டு உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், சபரிமலை கோயில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது தொடர்பாக நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து  உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கப்படும். நீதிமன்றத்தை நாட முடிவெடுத்திருப்பதால் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும். தேவசம் போர்டு எடுத்திருக்கும் முடிவுகளுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது சீராய்வு மனுத் தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com