“மே மாத மத்தியில் கொரோனா பரவல் தீவிரமாக இருக்குமென முன்பே எச்சரித்தோம்” - ஐஐடி பேராசிரியர்
இந்தியாவில் மே மாத மத்தியில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருக்கும் என கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி அன்றே மத்திய அரசுக்கு எச்சரித்திருந்தோம் என தெரிவித்துள்ளார் ஐஐடி ஹைதராபாத் பேராசிரியர் வித்யாசாகர்.
“மே 15 முதல் 22 வரை தோராயமாக நாள் ஒன்றுக்கு 1.2 லட்சம் பேர் வரை கொரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்படலாம் என அரசிடம் தெரிவித்திருந்தோம். மார்ச் 13 அன்றே இந்தியாவில் நோய் தொற்று பரவல் அதிகரிக்க கூடும் என கணித்திருந்தோம். இருப்பினும் முறையான தரவுகள் இல்லாததால் கொஞ்சம் தாமதம் நேர்ந்தது. அதனால் முறையான தரவுகள் கிடைத்ததும் அதனடிப்படையில் ஆய்வு செய்ததில் இதை ஏப்ரல் 2 அன்று கண்டறிந்து தெரிவித்தோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தியாவில் தற்போது நாள் ஒன்றுக்கு 3.5 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.