இந்தியா
'ஹெலிகாப்டரில் இருந்தபோது அப்பாவிடம் கடைசியாக பேசினேன்' - உயிரிழந்த வீரரின் மகன்
'ஹெலிகாப்டரில் இருந்தபோது அப்பாவிடம் கடைசியாக பேசினேன்' - உயிரிழந்த வீரரின் மகன்
தனது தந்தை ஹவில்தார் சத்பால் ஹெலிகாப்டரில் இருந்தபோது அவருடன் கடைசியாக பேசியதாக தெரிவித்துள்ளார் அவரது மகன் பிகல் ராய்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த 8-ஆம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அவர் பெங்களூருவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இவ்விபத்தில் உயிரிழந்த வீரர்களில் ஒருவரான ஹவில்தார் சத்பால் ஹெலிகாப்டரில் இருந்தபோது அவருடன் கடைசியாக பேசியதாக அவரது மகன் பிகல் ராய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிகல் ராய் கூறுகையில், ''அரசின் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். எனது தந்தை ஹெலிகாப்டரில் இருந்தபோது நான் அவருடன் கடைசியாக பேசினேன். விபத்து நிகழுமென்று நான் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை'' என்றார்.