\
“பெரியார் வழியில் அன்பால் உலகை உருவாக்குவோம்” - பினராயி விஜயன் தமிழில் ட்விட்

“பெரியார் வழியில் அன்பால் உலகை உருவாக்குவோம்” - பினராயி விஜயன் தமிழில் ட்விட்

“பெரியார் வழியில் அன்பால் உலகை உருவாக்குவோம்” - பினராயி விஜயன் தமிழில் ட்விட்
Published on: 

தந்தை பெரியாரின் பிறந்தநாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேரள முதல்வர் பிரனாய் விஜயன் தமிழில் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பெரியாரின் பிறந்தநாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம்.

சமூக நீதி, சாதி ஒழிப்பு, மற்றும் மதநல்லிணக்கம் ஆகிய போராட்டங்கள் இப்போது அதிகம் தேவைப்படுகின்றன. பெரியார் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம்" என பதிவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com